புழல்:புழல் சிறைச்சாலையில் தண்டனை சிறை, விசாரணை சிறை, மகளிர் தனி சிறை இயங்கி வருகிறது. தண்டனை சிறையில் சுமார் 700 பேரும், விசாரணை சிறையில் சுமார் 1700 பேரும், மகளிர் சிறையில் சுமார் 300 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள கைதிகள் தங்களது உறவினர்களுடன் பேசுவதற்காக தண்டனை சிறையில் 2 பொது தொலைபேசியும், விசாரணை சிறைச்சாலையில் 6 பொதுத் தொலைபேசியும், மகளிர் சிறையில் ஒரு பொது தொலைபேசியும் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பணம் கொடுத்து கைதிகள் இதில் பேசிக் கொள்ளலாம். பேசும் கைதியுடன் ஒரு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்.
இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் ஜெயிலர் தாமரை செல்வன் தலைமையில் போலீசார் நேற்றிரவு திடீர் என சிறைக் கைதிகளின் அறைகளை சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தி கொண்டிருந்தபோது விசாரணை சிறையில் ஒரு கைதி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், மும்பையை சேர்ந்த ராஜன் (எ) செல்லத்துரை ராஜன் (49) என்பதும் தெரிந்தது. இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 12:24:38 PM
-Updated 1/4/2025 12:06:22 PM
-Updated 1/4/2025 12:04:37 PM
-Updated 1/4/2025 12:04:27 PM
-Updated 1/4/2025 12:04:19 PM
-Updated 1/4/2025 12:04:11 PM
-Updated 1/4/2025 12:03:58 PM
-Updated 1/4/2025 12:03:49 PM
-Updated 1/4/2025 12:03:41 PM
-Updated 1/3/2025 2:18:56 PM
-Updated 1/3/2025 2:18:45 PM
-Updated 1/3/2025 2:18:36 PM
-Updated 1/3/2025 2:18:28 PM
-Updated 1/3/2025 2:18:19 PM
-Updated 1/3/2025 2:18:09 PM