சிவகங்கை அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி தந்தை, மகள் பலி
சிவகங்கை:சிவகங்கை அருகே தோட்டத்தில் இருந்து வந்தபோது மின்சாரம் தாக்கியதில் தந்தை இறந்தார். அவரை தேடிவந்த மகளும் இறந்து கிடந்த தந்தையை தொட்டதால் சம்பவஇடத்திலேயே பலியானார். சிவகங்கை அருகே சாமியார்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(58). விவசாயியான இவர் நேற்று மாலை கால்நடைகளை மேய்க்க சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். நேற்று இரவு 7 மணியளவில் அவருடைய வயல் பகுதியில் வந்தபோது மோட்டார் பம்புசெட்டுக்கு செல்லும் மின்வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடைய மகள் சாந்தி(35). இவரது கணவர் சுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கால்நடைகள் வீட்டுக்கு வந்தும் மேய்க்க சென்ற தந்தை வரவில்லை என அவரைத்தேடி வயலுக்கு சென்றுள்ளார். அங்கே மாரிமுத்து கீழே விழுந்து கிடந்ததை பார்த்ததும் அவரை தூக்கியுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சாந்தியும் அதே இடத்தில் பலியானார்.
உறவினர்கள் தந்தை, மகள் இருவரையும் காணவில்லையென பல இடங்களில் தேடியுள்ளனர். இரவு 12மணிக்கு மேல் வயல் பகுதியில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/14/2013 12:25:29 PM
-Updated 12/14/2013 12:25:18 PM
-Updated 12/14/2013 12:18:33 PM
-Updated 12/14/2013 12:16:03 PM
-Updated 12/13/2013 2:03:16 PM
-Updated 12/13/2013 2:03:06 PM
-Updated 12/13/2013 2:02:34 PM
-Updated 12/13/2013 2:02:04 PM
-Updated 12/13/2013 1:57:24 PM
-Updated 12/13/2013 1:57:10 PM
-Updated 12/13/2013 1:54:53 PM
-Updated 12/13/2013 1:54:42 PM
-Updated 12/12/2024 3:44:16 PM
-Updated 12/12/2024 3:44:05 PM
-Updated 12/12/2024 3:43:48 PM