சென்னை:திமுக பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்,திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன் மற்றும் முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னணியினர், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் பற்றியும் மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டும் இன்று மாலையில் நடைபெறும் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் தமிழ்நாடு முழுவதுமிருந்து திமுக நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/14/2013 12:25:43 PM
-Updated 12/14/2013 12:25:29 PM
-Updated 12/14/2013 12:18:33 PM
-Updated 12/14/2013 12:16:03 PM
-Updated 12/13/2013 2:03:16 PM
-Updated 12/13/2013 2:03:06 PM
-Updated 12/13/2013 2:02:34 PM
-Updated 12/13/2013 2:02:04 PM
-Updated 12/13/2013 1:57:24 PM
-Updated 12/13/2013 1:57:10 PM
-Updated 12/13/2013 1:54:53 PM
-Updated 12/13/2013 1:54:42 PM
-Updated 12/12/2024 3:44:16 PM
-Updated 12/12/2024 3:44:05 PM
-Updated 12/12/2024 3:43:48 PM