தாம்பரம்:தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கோட்டாட்சியர் அலுவலகம், புள்ளியல் துறை, சர்வே துறை, நில எடுப்பு பிரிவு போன்ற அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
தாலுகா அலுவலக வளாக பின்புறம் பொது மக்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பறை கட்டிடத்திற்கு தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் ஊழியர்களும், பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதனால் பொதுமக்களும் ஊழியர்களும் சிரமப்படுகின்றனர். தாலுகா அலுவலகத்தில், திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கப்படுவதால் வளாகமே துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிப்பறை கட்டிடத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களும் ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/11/2025 2:13:55 PM
-Updated 12/11/2025 2:13:46 PM
-Updated 12/11/2025 2:13:36 PM
-Updated 12/11/2025 2:12:31 PM
-Updated 12/11/2025 2:12:22 PM
-Updated 12/11/2025 2:12:10 PM
-Updated 12/11/2025 2:11:59 PM
-Updated 12/10/2025 3:02:03 PM
-Updated 12/10/2025 3:01:53 PM
-Updated 12/10/2025 3:01:41 PM
-Updated 12/10/2025 3:00:20 PM
-Updated 12/10/2025 3:00:02 PM
-Updated 12/10/2025 2:59:45 PM
-Updated 12/10/2025 2:59:33 PM
-Updated 12/10/2025 2:59:23 PM