கணவன் குடிபழக்கத்தால் இளம்பெண் தற்கொலை ஆவடியில் பரிதாபம்
ஆவடி: ஆவடி கோயில் பதாகை ராஜிவ் காந்திநகர் 6வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (32). பெயின்டர். மனைவி லாவண்யா (29). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் தினமும் வேலை முடிந்து குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவம்
ஆவடி கொல்லுமேடு திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (34), கார்பென்டர். மனைவி உஷா (32). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் குடிபழக்கத்தால் வேலைக்கு போகவில்லை. மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் சங்கருடன் ஏற்பட்ட தகராறில் கணவருடன் கோபித்துக் கொண்டு உஷா குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/11/2025 2:13:55 PM
-Updated 12/11/2025 2:13:46 PM
-Updated 12/11/2025 2:13:36 PM
-Updated 12/11/2025 2:12:31 PM
-Updated 12/11/2025 2:12:22 PM
-Updated 12/11/2025 2:12:10 PM
-Updated 12/11/2025 2:11:59 PM
-Updated 12/10/2025 3:02:03 PM
-Updated 12/10/2025 3:01:53 PM
-Updated 12/10/2025 3:01:41 PM
-Updated 12/10/2025 3:00:20 PM
-Updated 12/10/2025 3:00:02 PM
-Updated 12/10/2025 2:59:45 PM
-Updated 12/10/2025 2:59:33 PM
-Updated 12/10/2025 2:59:23 PM