படைவீரர்கள் குடும்ப நலன் பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம் ஜெயலலிதா கொடிநாள் வாழ்த்து
சென்னை:படை வீரர்களின் குடும்ப நலனை பாதுகாப்பதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என கொடிநாள் வாழ்த்து செய்தியில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தன் உயிரையும் பொருட்படுத்தாது தாய் நாட்டை காக்கும் முப்படை வீரர்களின் ஒப்பற்ற பணிகளையும், அவர்கள் செய்த தியாகங்களையும், போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி படை வீரர் கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை, விரிந்து பரந்திருக்கும் பாரத தேசத்தின், எல்லைகளை பாதுகாப்பதுடன் மக்களுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் படை வீரர்களின் குடும்ப நலனை காப்பது சமூக கடமையாகும்.
இந்த கடமைகளை நிறைவேற்றிடும் வகையில், கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி தியாகங்களை செய்த படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்காக பயன்படுத்தப்படுகிறது. போரில் உயிரிழந்த படை வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை, அவர்களின் மகள் திருமணத்திற்கு மானியம், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம், போன்ற பல்வேறு நலத்திட்டங்களை முன்னாள் படை வீரர்களின் நலன் கருதியும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
முன்னாள் படைவீரர்களின் நலனை பேணி காப்பதில் தமிழகம் என்றும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழக மக்களின் தேசப்பற்றையும், தியாகம் போற்றும் மனப்பான்மையையும் இந்திய அரசுக்கு பறைசாற்றும் வண்ணம், தமிழக மக்கள் அனைவரும் கொடிநாள் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/11/2025 2:13:55 PM
-Updated 12/11/2025 2:13:46 PM
-Updated 12/11/2025 2:13:36 PM
-Updated 12/11/2025 2:12:31 PM
-Updated 12/11/2025 2:12:22 PM
-Updated 12/11/2025 2:12:10 PM
-Updated 12/11/2025 2:11:59 PM
-Updated 12/10/2025 3:02:03 PM
-Updated 12/10/2025 3:01:53 PM
-Updated 12/10/2025 3:01:41 PM
-Updated 12/10/2025 3:00:20 PM
-Updated 12/10/2025 3:00:02 PM
-Updated 12/10/2025 2:59:45 PM
-Updated 12/10/2025 2:59:33 PM
-Updated 12/10/2025 2:59:23 PM