பார்வையற்ற கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு உடல்கள் ஒன்றாக தகனம்
கொள்ளிடம்:நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அன்பழகன் (60). பிறவியிலேயே பார்வையில்லாதவர். வாடகை சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சகுந்தலா (55). சைக்கிள் கடைக்கு அருகில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். தனலட்சுமி (26), அமுதா (24) என 2 மகள்கள்.
சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அன்பழகன் நேற்று முன்தினம் இறந்தார். இந்த அதிர்ச்சியில் சகுந்தலாவுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. மகள்கள் விருப்பப்படி இருவரது சடலங்களும் ஒரே பாடையில் எடுத்துச் செல்லப்பட்டு, ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக இறந்த தம்பதியரின் இறுதிச் சடங்கில் ஊர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/11/2025 2:13:55 PM
-Updated 12/11/2025 2:13:46 PM
-Updated 12/11/2025 2:13:36 PM
-Updated 12/11/2025 2:12:31 PM
-Updated 12/11/2025 2:12:22 PM
-Updated 12/11/2025 2:12:10 PM
-Updated 12/11/2025 2:11:59 PM
-Updated 12/10/2025 3:02:03 PM
-Updated 12/10/2025 3:01:53 PM
-Updated 12/10/2025 3:01:41 PM
-Updated 12/10/2025 3:00:20 PM
-Updated 12/10/2025 3:00:02 PM
-Updated 12/10/2025 2:59:45 PM
-Updated 12/10/2025 2:59:33 PM
-Updated 12/10/2025 2:59:23 PM