மீஞ்சூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவருக்கு அடி பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை
பொன்னேரி: படிக்கட்டில் இருந்து முதியவர் தவறிவிழுந்ததால் பஸ்சை வழிமறித்து டிரைவரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு பைக்கில் தப்பியது. மீஞ்சூர் அருகே நேற்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீஞ்சூரில் இருந்து சென்னை பாரிமுனைக்கு அரசு பஸ் 64 பி நேற்று மாலை புறப்பட்டு சென்றது. மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு கிராமம் அருகே வரும்போது பஸ் நிறுத்தத்தில் டிரைவர் ஜம்புலிங்கம் பஸ்சை நிறுத்தியுள்ளார். பயணிகள் ஏறியதும் டிரைவர் பஸ்சை எடுத்துள்ளார். அப்போது படிக்கட்டில் இருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்தார். இதில் முதியவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றபோது பின்தொடர்ந்து 2 பைக்கில் 4 பேர் பஸ்சை பின்தொடர்ந்து வந்தனர். சிறிது தூரத்தில் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பைக்கில் இருந்து இறங்கிய 2 பேர் பஸ்சில் ஏறி டிரைவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர்கள் தாக்கியதில் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஜம்புலிங்கம் மீஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2013 2:27:30 PM
-Updated 11/27/2013 2:27:12 PM
-Updated 11/27/2013 2:27:02 PM
-Updated 11/27/2013 2:26:49 PM
-Updated 11/27/2013 2:26:40 PM
-Updated 11/27/2013 2:26:30 PM
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM