விசுவநாதன் எம்.பி. கோரிக்கை ஏற்று காஞ்சிபுரத்துக்கு மேலும் 2 மின்சார ரயில் விரைவில் தொடக்க விழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்துக்கு மேலும் 2 மின்சார ரயில் போக்கு வரத்து தொடங்க உள்ளது.காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வேலை விஷயமாக சென்னைக்கு வருகின்றனர். மாணவ, மாணவிகள் படிக்க செல்கின்றனர். இவர்களுக்கு ரயில் போக்குவரத்து வசதியாக உள்ளது. தற்போது, திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு காலை 5.30, 7.20, 8.05, 10.40, மதியம் 1.55 மாலை 5.25 ஆகிய நேரங்களில் 6 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை போதுமானதாக இல்லாததால், கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் எனவும், ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதன் கடந்த மாதம் தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஷ்ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இந்த நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு கூடுதலாக 2 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு, 8.20 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும். பின் அங்கிருந்து காலை 9.00 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு கடற்கரைக்கு வரும்.
இதேபோல் மற்றொரு ரயில் மாலை 3.25 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு 6.15 மணிக்கு காஞ்சிபுரம் செல்லும். பின்னர் அங்கிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்துக்கு வரும். இந்த புதிய ரயில்கள் தொடக்க விழா விரைவில் நடை பெறுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2013 2:27:30 PM
-Updated 11/27/2013 2:27:20 PM
-Updated 11/27/2013 2:27:12 PM
-Updated 11/27/2013 2:26:49 PM
-Updated 11/27/2013 2:26:40 PM
-Updated 11/27/2013 2:26:30 PM
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM