Tamil Month Rasi Palan Maasi 2013
2013
27
Nov
தாக்குதல் சம்பவம் ரேஷன் கடையில் பெண் ஊழியர்கள் பீதி கேமரா பொருத்த கோரிக்கை


ஆலந்தூர்:பெரம்பூர் பெரியார் நகர் 8வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி கோமதி (40). ஆலந்தூர் வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார். கடந்த 23ம் தேதி ரேஷன் கடையில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோமதியின் காதை அறுத்து நகையை பறித்தனர். மேலும், விற்பனை பணம் ரூ.13 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார் கோமதி. அவரிடம் தனிப்படை போலீசார், பழைய குற்றவாளிகளின் படங்களை காண்பித்து விசாரித்தனர். அந்த படங்களை பார்த்த அவர், ‘எனக்கு சரியாக ஞாபகம் இல்லை என கூறிவிட்டார். மேலும் அந்த கடையில் வேலை பார்க்க பயமாக உள்ளதாகவும், வேறு கடைக்கு மாற்றும்படியும் அதிகாரியிடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த ரேஷன் கடை நேற்று திறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆலந்தூர், புழுதிவாக்கம், உள்ளகரம், மடிப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். உதவிக்கு ஆண் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran