ஆவடி காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை உரிமையாளருக்கு வலைவீச்சு
ஆவடி:ஆவடியில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்துவந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காப்பக உரிமையாளரை தேடி வருகின்றனர். ஆவடி காமராஜர் நகர் 2வது தெருவில் சிறுவர், சிறுமிகள் காப்பகம் உள்ளது. இங்கு ஐந்து வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தங்கியுள்ளனர். காப்பகத்தை குழந்தைவேலு (46) என்பவர் நடத்துகின்றார்.
இங்கு தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தைவேலு மீது புகார் வந்தது. இதுசம்பந்தமாக தேசிய மக்கள் உரிமை இயக்கத்தின் நிர்வாகி சென்னை ஆலந்தூரை சேர்ந்த சமுத்திரதேவி (35) நேற்று ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதற்கிடையே காப்பக உரிமையாளர் குழந்தைவேலு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2013 2:27:30 PM
-Updated 11/27/2013 2:27:20 PM
-Updated 11/27/2013 2:27:12 PM
-Updated 11/27/2013 2:27:02 PM
-Updated 11/27/2013 2:26:49 PM
-Updated 11/27/2013 2:26:30 PM
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM