ஆவடி:திருநின்றவூர் ரவுடி கொலையில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஆவடி அருகே திருநின்றவூர் ராமதாசபுரம் முதல் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கணபதி என்ற பிரபா (27). பிரபல ரவுடியான இவர், கடந்த 3ம் தேதி திருநின்றவூர் இந்திரா நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.
இது குறித்து திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தி, திருநின்ற வூர் பேரூராட்சி கவுன்சிலர் பார்த்திபன் (29), கூட்டாளிகள் திருநின்றவூர் பெரிய காலனி பள்ளர் தெருவை சேர்ந்த பாலு என்ற சுதர்சனம் (28), பிரபாகரன் (23), பள்ளு என்ற பார்த்திபன் (27), வினோத்குமார் (26) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேரும் தொடர்ந்து பல்வேறு குற்றங்கள் செய்து உள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்க திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் சத்தியன் பரிந்துரை செய்தார். இதையடுத்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்படி 5 பேரும் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2013 2:27:30 PM
-Updated 11/27/2013 2:27:20 PM
-Updated 11/27/2013 2:27:12 PM
-Updated 11/27/2013 2:27:02 PM
-Updated 11/27/2013 2:26:49 PM
-Updated 11/27/2013 2:26:40 PM
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM