Tamil Month Rasi Palan Maasi 2013
2013
25
Nov
கணவருடன் கருத்து வேறுபாடு குழந்தையுடன் தீக்குளித்தார் பெண் இருவரும் பலியானதால் சோகம்


காஞ்சிபுரம்:கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைக்கு தீ வைத்து தானும் தீக்குளித்தார் பெண். இருவருமே பரிதாபமாக பலியானார்கள்.திண்டிவனத்தை சேர்ந்தவர் தைமுத்து (25). இவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக  இருக்கிறார். காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில் வசிக்கின்றார். இவரது மனைவி செல்வகுமாரி (20). இவர், தள்ளுவண்டியில்  பொம்மை வியாபாரம் செய்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சந்தியா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை வருடத்துக்கு மேலாக கணவரை பிரிந்து செல்வகுமாரி தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களை சேர்த்து வைக்க உறவினர்கள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த செல்வகுமாரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு குழந்தையின் உடலிலும் தீவைத்தார். அவர்களது கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். செல்வகுமாரி, குழந்தையை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு செல்வகுமாரி, குழந்தை சந்தியா பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். தீக்குளித்து தாயும் மகளும் இறந்தது ஒலிமுகமது பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran