கூவத்தூரில் இன்று அதிகாலை லாரிகள் மோதல்: கிளீனர் பலி
திருக்கழுக்குன்றம்:கூவத்தூர் பஸ் நிலையம் அருகே இன்று அதிகாலை யில் இறால் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியதில் கிளீனர் பலியானார். கல்பாக்கம் அடுத்த கடலூர் பெரியகுப்பத்தில் உள்ள இறால் பண்ணையில் இருந்து நேற்று இரவு ஒரு லாரி இறால் ஏற்றி கொண்டு கடலூர் மாவட்டத்துக்கு சென்றது. லாரியை டிரைவர் முருகன் ஓட்டினார். கடலூர் மாவட்டம் மாலிப்பேட்டையை சேர்ந்தவர் கமர் (30) கிளீனராக இருந்தார். இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மோதி யது. இதில் இறால் லாரி கண்ணாடி உடைந்து கிளீனர் கமர் கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த கூவத்தூர் போலீசார் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்து பற்றி கூவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM
-Updated 11/26/2013 2:40:01 PM
-Updated 11/26/2013 2:38:06 PM
-Updated 11/26/2013 2:29:26 PM
-Updated 11/26/2013 2:26:58 PM
-Updated 11/25/2013 3:36:51 PM
-Updated 11/25/2013 3:36:42 PM