சுத்திகரிப்பு நிலையம் இன்றி இயங்கிய 50 சாயப்பட்டறைகளுக்கு சீல் குமாரபாளையத்தில் பரபரப்பு
பள்ளிபாளையம்:குமாரபாளையம் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்றி இயங்கி வந்த 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. இங்கிருந்து வெளியாகும் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் காவிரி ஆறு மாசடைந்து வருகிறது.
உயர் நீதிமன்ற தடைக்கு பின்னரும் குமாரபாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்றி ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றை மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் சாயப்பட்டறைகள் தொடர்ந்து செயல்பட்டன. இதையடுத்து சாயப்பட்டறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டன. இருப்பினும் தொடர்ந்து செயல்படும் சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்து இன்று காலை நாமக்கல் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குமாரபாளையம் பகுதிக்கு வந்தனர். மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் முருகன் தலைமையில் ஒரு குழுவினரும், ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஜெயலட்சுமி தலைமையில் மற்றொரு குழுவினரும் குமாரபாளையத்திற்கு வந்து தடையை மீறி செயல்படும் சாயப்பட்டறைகளில் ஆய்வு செய்து சீல் வைத்து வருகின்றனர்.
திருச்செங்கோடு ஆர்டிஓ செங்கோட்டையன், டிஎஸ்பி சுஜாதா ஆகியோர் முன்னிலையில் சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதையொட்டி 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமாக தடையை மீறி செயல்படும் சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றுவது வழக்கம். இதனால் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். ஆனால் இன்று அதிகாரிகள் சாயப்பட்டறைகளை இடிப்பதை தவிர்த்து, அவற்றுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு காணப்படவில்லை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM
-Updated 11/26/2013 2:40:01 PM
-Updated 11/26/2013 2:38:06 PM
-Updated 11/26/2013 2:29:26 PM
-Updated 11/26/2013 2:26:58 PM
-Updated 11/25/2013 3:36:51 PM
-Updated 11/25/2013 3:36:42 PM