சேலம்:ஏற்காடு இடைத்தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் பூ வியாபாரிடம் ரூ.4 லட்சம் சிக்கியது. ஏற்காடு இடைத்தேர்தலையொட்டி தொகுதியின் எல்லை பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது. வருவாய் துறையினர், தமிழக போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அரபி கல்லூரி பகுதியில் உள்ள செக்போஸ்டில் நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் நடந்த சோதனையில் ஓசூரில் இருந்து வந்த ஒரு டாடா சுமோ காரை மறித்து தணிக்கை செய்தனர்.
அதில், ரூ.4 லட்சம் பணம் இருந்தது. காரில் வந்தவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த மல்லிகை பூ வியாபாரி ஸ்டாலின் (23) என்பதும் ஓசூரில் பூவை விற்று விட்டு பணத்துடன் சென்றதும் தெரிய வந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/22/2013 2:27:09 PM
-Updated 11/22/2013 2:27:01 PM
-Updated 11/22/2013 2:26:52 PM
-Updated 11/22/2013 2:26:43 PM
-Updated 11/22/2013 2:26:34 PM
-Updated 11/22/2013 2:26:25 PM
-Updated 11/22/2013 2:26:17 PM
-Updated 11/21/2013 3:28:21 PM
-Updated 11/21/2013 3:28:11 PM
-Updated 11/21/2013 3:27:48 PM
-Updated 11/21/2013 3:27:40 PM
-Updated 11/20/2013 2:35:56 PM
-Updated 11/20/2013 2:35:31 PM
-Updated 11/20/2013 2:35:22 PM
-Updated 11/20/2013 2:35:05 PM