ஏற்காட்டில் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரிடம் மக்கள் சரமாரி புகார்
சேலம்: ஏற்காட்டில் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் பொது மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக அமைச்சர்கள் ஏற்காடு தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்காடு மலைக் கிராமங்களில் முகாமிட்டுள்ளார்.
நேற்று அவர் மாரமங்கலம் ஊராட்சி பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் அவரிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர். ‘அம்மா திட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை மனுக்களை வாங்கிய அதிகாரிகள் மனுக்களை தள்ளுபடி செய்து விட்டனர். முறையாக பணமும் வரவில்லை‘ என்றனர். தேர்தல் முடிந்த பிறகு முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் கூறினார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/22/2013 2:27:09 PM
-Updated 11/22/2013 2:27:01 PM
-Updated 11/22/2013 2:26:52 PM
-Updated 11/22/2013 2:26:43 PM
-Updated 11/22/2013 2:26:34 PM
-Updated 11/22/2013 2:26:25 PM
-Updated 11/22/2013 2:26:17 PM
-Updated 11/21/2013 3:28:21 PM
-Updated 11/21/2013 3:28:11 PM
-Updated 11/21/2013 3:27:48 PM
-Updated 11/21/2013 3:27:40 PM
-Updated 11/20/2013 2:35:56 PM
-Updated 11/20/2013 2:35:31 PM
-Updated 11/20/2013 2:35:22 PM
-Updated 11/20/2013 2:35:05 PM