அதிவேகமாக சென்ற போது பாறை மீது பைக் மோதி நண்பர்கள் 3 பேர் பலி பழநி அருகே நள்ளிரவில் சோகம்
பழநி:பழநி அருகே நள்ளிரவில் பாறை மீது பைக் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பலியாகினர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார் (27), வீரக்குமார் (18), பிரபாகரன் (23). 3 பேரும் நண்பர்கள். ஆனந்த குமார் பைனான்ஸ் தொழிலும், பிரபாகரன் டெய்லர் வேலையும் செய்து வந்தனர்.
நேற்றிரவு 12.30 மணிக்கு மூவரும் பழநி அருகே உள்ள தொப்பம்பட்டியில் இருந்து ஒரே பைக்கில் சரவணம்பட்டிக்கு புறப்பட்டனர். சரவணம்பட்டி முருகன் கோயில் அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. அதே வேகத்தில் சென்று அருகே இருந்த பாறை மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் தலையில் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆனந்தகுமார், பிரபாகரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட வீரக்குமாருக்கு பழநி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். விபத்தில் பலியான மூவரது உடல்களும் பழநி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. தகவலறிந்த உறவினர்கள், கிராம மக்கள் இன்று காலை திரண்டு வந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/22/2013 2:27:09 PM
-Updated 11/22/2013 2:27:01 PM
-Updated 11/22/2013 2:26:52 PM
-Updated 11/22/2013 2:26:43 PM
-Updated 11/22/2013 2:26:34 PM
-Updated 11/22/2013 2:26:25 PM
-Updated 11/22/2013 2:26:17 PM
-Updated 11/21/2013 3:28:21 PM
-Updated 11/21/2013 3:28:11 PM
-Updated 11/21/2013 3:27:48 PM
-Updated 11/21/2013 3:27:40 PM
-Updated 11/20/2013 2:35:56 PM
-Updated 11/20/2013 2:35:31 PM
-Updated 11/20/2013 2:35:22 PM
-Updated 11/20/2013 2:35:05 PM