Tamil Month Rasi Palan Maasi 2013
2013
19
Nov
கரும்பு கொள்முதல் விலையை 3500 ஆக உயர்த்த வேண்டும் ராமதாஸ் கோரிக்கை


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:அண்டை மாநிலங் களில் கடந்த இரண் டாண்டுகளில் கரும்பு கொள்முதல் விலை ரூ.800க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.350 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது.  கரும்பு சாகுபடிக்கான செலவு அதிகரித்துள்ளதால் கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.2800 கொள்முதல் விலையாக வழங்கிய உத்தரப்பிரதேச அரசு நடப்பாண்டில் ரூ. 3200 வழங்க திட்ட மிட்டிருக்கிறது. மத்திய அரசும் நடப்பாண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை 23.5% உயர்த்தியிருக் கிறது.

எனவே, நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 கொள்முதல் விலையாக வழங்குவதற்கான அறி விப்பை அரசு வெளி யிடவேண்டும். விவசாயி களுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ. 250 கோடி க்கும் அதிக மாக  நிலுவைத் தொகை வைத்துள்ளது. அவற்றை வட்டியுடன் விவசாயி களுக்கு உடனே வழங்க வேண்டும். நடப் பாண்டில் கரும்பு வழங்கிய திலிருந்து 15 நாட்களுக்குள் அதற்கான தொகையை விவசாயி களுக்கு வழங்கவும் ஆலை நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran