பெரியபாளையம் சந்திப்பில் கோபுர விளக்கு எரியாததால் பக்தர்கள் அவதி
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்கோபுர மின்விளக்கு பழுதாகிவிட்டது.
இதனால் மும்முனை பகுதி இருள்சூழ்ந்து கிடக்கிறது. இரவில் பக்தர்கள் நடமாட பயப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி நடக்கிறது. ஆகவே உயர்கோபுர மின்விளக்கை எரியவைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/13/2013 2:50:35 PM
-Updated 11/13/2013 2:50:23 PM
-Updated 11/13/2013 2:50:14 PM
-Updated 11/13/2013 2:50:03 PM
-Updated 11/13/2013 2:49:49 PM
-Updated 11/13/2013 2:49:30 PM
-Updated 11/13/2013 2:48:46 PM
-Updated 11/13/2013 2:04:25 PM
-Updated 11/12/2024 4:50:55 PM
-Updated 11/12/2024 4:50:46 PM
-Updated 11/12/2024 4:50:37 PM
-Updated 11/12/2024 4:50:25 PM
-Updated 11/12/2024 4:50:09 PM
-Updated 11/12/2024 4:49:58 PM
-Updated 11/12/2024 2:43:54 PM