Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
Nov
நாடாளுமன்றத்தில் வஉசிக்கு சிலை ஏசி சண்முகம் வலியுறுத்தல்


திருவள்ளூர்:நாடாளுமன்றத்தில் வ.உ.சிக்கு சிலையமைக்க மத்திய அரசும், சென்னையில் மணி மண்டபம் அமைக்க மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் கூறினார்.திருவள்ளூரில் புதிய நீதி கட்சி செயல் வீரர் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பூவை ரவி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஏகாம்பரம், அண்ணாமலை, சிவகுமார், கருணாநிதி, ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சுந்தரம், சாமிநாதன், செந்தில் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகிகள் தியாக சுந்தரம், மணவாளன், செல்வராஜ் வரவேற்றனர். கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.

மாநில நிர்வாகிகள் ஆர்.டி.சேதுராமன், எஸ்.ஏ. ராஜாராம், எஸ்.பழனி, எஸ்.எல்.சுதர்சனம், மனோகரமூர்த்தி, செந்தில்குமரன், முரளி ஆகியோர் பேசினர். இதில், ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, கந்தசாமி, ரவிச்சந்திரன், கிருபானந்தம், பேரம்பாக்கம் ஆர்.சேகர், செல்வம், ஏகாம்பரம், முனிராஜ், ரவி, சீனிவாசன், தணிகாசலம், துளசிங்கம், முருகவேல், பொன்னம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் என்.மண வாளன் நன்றி கூறினார்.
பின்னர் ஏசி. சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஏற்காடு இடைத்தேர்தலில் புதிய நீதிக்கட்சி போட்டியிடாது. எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை ஒரு வாரத்தில் மாநில செயற்குழு கூடி முடிவு செய்யும்.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலியார், வேளாளர், பிள்ளைமார், செங்குந்தர், சேனைதலைவர் ஆகியோரை பிற்பட்டோர் பட்டியலில் இருந்து மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்திட வேண்டும். நாடாளுமன்றத்தில் வ.உ.சி.க்கு சிலையமைக்க மத்திய அரசும், சென்னையில் மணி மண்டபம் அமைக்க மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran