நாளை கடையடைப்பு திட்டமிட்டபடி நடக்கும் வெள்ளையன் அறிக்கை
சென்னை:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஈழத்தில் இலங்கை ராணுவம் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை கடையடைப்பு நடத்துவது என்று பேரவை அறிவித்தது. அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அனேக தொழிற் சங்கங்களும் மதிமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மன்மோகன் சிங் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்னும் முடிவு எந்த விளைவையும் ஏற்படுத்தி விடாது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் அது இனப்படுகொலை இலங்கைக்கு சாதகமாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ள கடையடைப்பு திட்டமிட்டபடி நடைபெறும்.இவ்வாறு வெள்ளை யன் தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/13/2013 2:50:35 PM
-Updated 11/13/2013 2:50:23 PM
-Updated 11/13/2013 2:50:14 PM
-Updated 11/13/2013 2:50:03 PM
-Updated 11/13/2013 2:49:49 PM
-Updated 11/13/2013 2:49:30 PM
-Updated 11/13/2013 2:48:46 PM
-Updated 11/13/2013 2:04:25 PM
-Updated 11/12/2024 4:50:55 PM
-Updated 11/12/2024 4:50:46 PM
-Updated 11/12/2024 4:50:37 PM
-Updated 11/12/2024 4:50:25 PM
-Updated 11/12/2024 4:50:09 PM
-Updated 11/12/2024 4:49:58 PM
-Updated 11/12/2024 2:43:54 PM