சங்கராபுரம் அருகே துணிகரம் கோயில் உண்டியலை உடைத்து 2 லட்சம் பணம், நகை கொள்ளை
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர். இதில் அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் தப்பின. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள ரங்கப்பனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இதில் செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ தினங்கள் பிரார்த்தனை மற்றும் விசேஷம் நடைபெறுவது வழக்கம். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயில் பூசாரியின் தாய் ராஜம்மாள் கோயிலின் கேட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது சாமி அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வெளியில் உள்ள உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்ததால் கொள்ளை நடந்தது. தெரியவந்தது.
தகவலறிந்த பூசாரி தங்கதுரை சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது அம்மன் கழுத்தில் தாலி உள்ளிட்ட ஆகிய நகைகள் திருடு போகாமல் இருந்தது. உண்டியலை பணத்தை மட்டுமே திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்குமென தெரிகிறது. தகவல் கிடைத்ததும் வடபொன்பரப்பி சப்&இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/9/2025 2:38:02 PM
-Updated 11/9/2025 2:36:45 PM
-Updated 11/9/2025 2:36:30 PM
-Updated 11/9/2025 2:00:16 PM
-Updated 11/8/2025 2:46:11 PM
-Updated 11/8/2025 2:45:44 PM
-Updated 11/8/2025 2:45:12 PM
-Updated 11/7/2025 3:12:05 PM
-Updated 11/7/2025 3:11:56 PM
-Updated 11/7/2025 3:11:33 PM
-Updated 11/7/2025 3:11:24 PM
-Updated 11/7/2025 3:11:15 PM
-Updated 11/7/2025 3:11:04 PM
-Updated 11/7/2025 2:48:55 PM
-Updated 11/6/2025 2:56:59 PM