திருவள்ளூர் தேரடியில் உள்ள ஜவுளிக்கடையில் 10 லட்சம் கொள்ளை
திருவள்ளூர்:திருவள்ளூர் தேரடியில் குமரன் டெக்ஸ் என்ற ஜவுளிக்கடை உள்ளது. 3 மாடி கட்டிடம் கொண்டது. நேற்றிரவு இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிச் சென்றனர்.இன்று காலை கடையின் உரிமையாளர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் வந்தனர். கடையை திறந்து சென்றபோது துணிகள் சிதறிக் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கல்லாப்பெட்டியை போய் பார்த்தனர். அதில் வைக்கப்பட்டு இருந்த 10 லட்ச ரூபாய் கொள்ளைப்போனதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஜவுளிக்கடைக்கு பின்புறம் படிக்கட்டு கதவு உள்ளது. இந்த ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து உள்ளனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஷட்டர், கல்லாப்பெட்டி ஆகியவற்றில் பதிவாகி உள்ள மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி திருவள்ளூர் டவுண் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்ம நபர்களை பற்றி விசாரிக்கின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் தேரடி பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் கொள்ளை நடந்து இருப்பது வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/24/2013 2:34:56 PM
-Updated 9/24/2013 2:34:47 PM
-Updated 9/24/2013 2:34:33 PM
-Updated 9/24/2013 2:34:23 PM
-Updated 9/24/2013 2:34:13 PM
-Updated 9/24/2013 2:34:04 PM
-Updated 9/24/2013 2:33:54 PM
-Updated 9/24/2013 2:03:16 PM
-Updated 9/24/2013 2:03:07 PM
-Updated 9/24/2013 2:02:58 PM
-Updated 9/24/2013 2:02:48 PM
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:11 PM