பள்ளி மாணவன் பலி அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
தாம்பரம்:பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட நெமிலிச்சேரியில் அகஸ்தீஸ்வரர் கோயில், இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலையொட்டியே குளம் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தை பயன்படுத்துகின்றனர். இக்குளத்தின் ஒரு கரையில் இறுதி சடங்குகளும், மற்றொரு கரையில் புதுமண தம்பதிகள் மங்கள கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. சுற்றுச்சுவர், படிக்கட்டுகள் இல்லாததால் சிறுவர்கள் இந்த குளத்தில் குளிக்கின்றனர்.
ஐஸ்வரியா நகரை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் சரண்ராஜ் (11), 7ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் கோயில் குளத்தில் குளிக்கும் போது, தண்ணீரில் மூழ்கி இறந்தான். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர், நடைபாதை, பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக படிக்கட்டுகள், மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/24/2013 2:34:56 PM
-Updated 9/24/2013 2:34:47 PM
-Updated 9/24/2013 2:34:33 PM
-Updated 9/24/2013 2:34:23 PM
-Updated 9/24/2013 2:34:13 PM
-Updated 9/24/2013 2:34:04 PM
-Updated 9/24/2013 2:33:54 PM
-Updated 9/24/2013 2:03:16 PM
-Updated 9/24/2013 2:03:07 PM
-Updated 9/24/2013 2:02:58 PM
-Updated 9/24/2013 2:02:48 PM
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM