ஆவடி:அம்பத்தூர் மண்டலம் சென்னை மாநகராட்சி 86வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கலைவாணர் பிரதான சாலை உள்ளது. ஐ.சி.எப் காலனி, எம்.ஜி.ஆர் புரம், ஐயப்பா நகர், அபர்ணா நகர், அயப்பாக்கம், திருவேற்காடு, அம்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளை சார்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சாலை வழியே அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், திருமங்கலம், அண்ணாநகர் பகுதிகளுக்கு செல்லலாம்.
கலைவாணர் பிரதான சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக மாறியது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. மின்விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவியர் சிரமப்பட்டே சென்றுவருகின்றனர். இந்த சாலையில் அதிக அளவில் தண்ணீர் லாரிகள் செல்வதால் விபத்து நடக்கிறது. கலைவாணர் பிரதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/24/2013 2:34:56 PM
-Updated 9/24/2013 2:34:47 PM
-Updated 9/24/2013 2:34:33 PM
-Updated 9/24/2013 2:34:23 PM
-Updated 9/24/2013 2:34:13 PM
-Updated 9/24/2013 2:34:04 PM
-Updated 9/24/2013 2:33:54 PM
-Updated 9/24/2013 2:03:16 PM
-Updated 9/24/2013 2:03:07 PM
-Updated 9/24/2013 2:02:58 PM
-Updated 9/24/2013 2:02:48 PM
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM