பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
சென்னை: பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பார்வையற்ற பட்டதாரிகள் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர். பார்வையற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குவது, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண்ணை 40 சதவீதமாக நிர்ணயிப்பது, மாத உதவி தொகையை உயர்த்துவது, லேப்டாப் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக அவர்கள் போராட்டம் அமைந்துள்ளது.
அந்த போராட்டத்தை ஒடுக்க முனையும் வகையில் காவல் துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறோம். போராடும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM
-Updated 9/23/2013 2:35:00 PM
-Updated 9/23/2013 2:34:30 PM
-Updated 9/23/2013 2:34:18 PM
-Updated 9/23/2013 2:33:57 PM
-Updated 9/23/2013 2:33:45 PM
-Updated 9/23/2013 2:33:36 PM
-Updated 9/23/2013 2:12:33 PM
-Updated 9/23/2013 2:12:24 PM
-Updated 9/23/2013 1:53:55 PM
-Updated 9/21/2013 12:07:22 PM