காவல் நிலைய எல்லையை காரணம் காட்டி புகார் கொடுக்க வந்த முதிய தம்பதி அலைக்கழிப்பு
தாம்பரம்:15 நாட்களாக புகாரை பெறாமல் மூத்த குடிமக்களை அலைக்கழித்துவிட்டு, பின்னர் தங்களது எல்லை இல்லை என கூறி, வேறு காவல் நிலையத்துக்கு போலீசார் அனுப்பினர். தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரை சேர்ந்தவர் ராஜன் (73). பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி திலகவதி (68), கடந்த சில மாதங்களாக இவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் கடந்த மாதம் 31ம் தேதி இரவு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வண்டலூர்&மீஞ்சூர் 400 அடி சாலை மேம்பாலம் அருகே ஆட்டோவில் வந்து இறங்கினர். அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது மர்மநபர் ஒருவர், திலகவதியின் கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார்.
இதுகுறித்து சோமங்கலம் போலீசில் புகார் செய்ய தம்பதியினர் சென்றனர். ஆனால் புகாரை பெறாமல், நேற்று முன்தினம் வரை போலீசார் அலைக்கழித்ததோடு, ‘சம்பவம் நடந்த இடம் பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது. அங்கு புகார் செய்யுங்கள்Õ என கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்று புகார் செய்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு எல்லை பிரச்னையை கையாளும் போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM
-Updated 9/23/2013 2:35:00 PM
-Updated 9/23/2013 2:34:30 PM
-Updated 9/23/2013 2:34:18 PM
-Updated 9/23/2013 2:33:57 PM
-Updated 9/23/2013 2:33:45 PM
-Updated 9/23/2013 2:33:36 PM
-Updated 9/23/2013 2:12:33 PM
-Updated 9/23/2013 2:12:24 PM
-Updated 9/23/2013 1:53:55 PM
-Updated 9/21/2013 12:28:14 PM