கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் கொலை மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு போலீஸ் வலை
ஆவடி:கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி பாரதிதாசன் நகர் பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செந்தில்குமார். இவரது மனைவி பூங்கொடி (31), அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமாரிடம் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
ஆவடி குளக்கரை தெருவை சேர்ந்த சாமுண்டீஸ்வரி (40) என்பவர், உறவினர் மூலம் எனக்கு அறிமுகமானார். கட்டிடம் கட்டி விற்பனை செய்வதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் சாமுண்டீஸ்வரி கூறினார். அதை நம்பி அவருக்கு ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் வரை கொடுத்தேன். பின்னர் அந்த பணத்தை திரும்ப கேட்டபோது தர மறுத்துவிட்டார். பணத்தை கேட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயப்படுகிறேன். எனவே, சாமுண்டீஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை ஆவடி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, எஸ்ஐ சீனிவாசன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சாமுண்டீஸ்வரியை தேடி வருகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM
-Updated 9/23/2013 2:35:00 PM
-Updated 9/23/2013 2:34:30 PM
-Updated 9/23/2013 2:34:18 PM
-Updated 9/23/2013 2:33:57 PM
-Updated 9/23/2013 2:33:45 PM
-Updated 9/23/2013 2:33:36 PM
-Updated 9/23/2013 2:12:33 PM
-Updated 9/23/2013 2:12:24 PM
-Updated 9/23/2013 1:53:55 PM
-Updated 9/21/2013 12:28:14 PM