Tamil Month Rasi Palan Maasi 2013
2013
20
Sep
ஆவடியில் தனி தாலுகா ஆபீஸ் அமைக்க மக்கள் வேண்டுகோள் சான்றிதழ் பெற அலையும் அவலம்


ஆவடி:ஆவடியில் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை அருகே ஆவடி நகராட்சியில் திருமுல்லைவாயல், கோவில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை, மிட்னமல்லி ஆகிய பகுதிகள் உள்ளன. ஆவடி அருகே பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், ஆலத்தூர், கர்லப்பாக்கம், பாலவேடு, மோரை, வெள்ளானூர், பம்மது குளம், பொத்தூர், வெள்ளச்சேரி ஆகிய ஊராட்சிகளும் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் வருமானம், ஜாதி, இருப்பிட சான்றிதழ், முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளுக்காக அம்பத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு செல்கின்றனர்.

ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு, விளிஞ்சியம்பாக்கம், பாலேரிப்பட்டு, சேக்காடு, தண்டுரை ஆகிய பகுதி மக்களும் நத்தம்பேடு, நடுக்குத்தகை, கொசவன்பாளையம், அன்னம்பேடு, கன்னப்பாளையம், கருணாகரச்சேரி, நெமிலிச்சேரி, சோராஞ்சேரி ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருநின்றவூர் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் பூந்தமல்லி தாலுகா அலுவலகத்துக்கும் திருநின்றவூர் அருகில் உள்ள பாக்கம் ஊராட்சி மக்கள் திருவள்ளூர் தாலுகா அலுவலகத்துக்கு செல்கின்றனர்.

பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திருநின்றவூரில் இருந்து 15 கி.மீ. தொலை விலும் நடுக்குத்தகையில் இருந்து 20 கி.மீ. தொலை விலும், ஆவடியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், பட்டாபிராமில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பாக்கம் பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் தாலுகா அலுவலகம் உள்ளது.

அம்பத்தூர் தாலுகா அலுவலகம் ஆலத்தூர், கர்லப்பாக்கம் ஊராட்சியில் இருந்து சுமார் 20 முதல் 25 கி.மீ. தொலைவிலும், முத்தாபுதுப்பேட்டை, மிட்னமல்லி, மோரை 15 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இதனால், பொதுமக்கள் சான்றிதழ் பெற நீண்ட தூரம் அலைகின்றனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, ஆவடியில் தனி தாலுகா அலுவலகம் அமைத்தால் வசதியாக இருக்கும் என்றும் இதற்கு வருவாய் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran