காஞ்சிபுரம்:மழைக்காலம் தொடங்கி விட்டதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொசுவை ஒழிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பெரும்பாலான மாவட்டங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. கொசுவை ஒழிக்க மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் 10 பேர் கொண்ட 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் மாவட்டத்துக்கு உட்பட்ட 7 ஒன்றியங்களில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். திறந்தவெளியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பழைய டயர்கள், தேங்காய் மட்டைகளை அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்துதல், பீளிச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். மேலும் வீட்டின் மாடி மீது மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதுகுறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் கூறும்போது, ‘‘டெங்கு கொசு ஒழிப்பு கழகம் கடந்த ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் வெளியூர் ஆட்கள்தான் பணியாற்றுவர். இவர்களுக்கு கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படும். இவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர்’’ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/21/2013 12:28:14 PM
-Updated 9/21/2013 12:07:22 PM
-Updated 9/21/2013 12:07:13 PM
-Updated 9/21/2013 12:07:05 PM
-Updated 9/21/2013 12:06:55 PM
-Updated 9/21/2013 12:06:47 PM
-Updated 9/21/2013 12:06:37 PM
-Updated 9/21/2013 12:03:18 PM
-Updated 9/20/2013 3:28:35 PM
-Updated 9/20/2013 2:41:49 PM
-Updated 9/20/2013 2:41:40 PM
-Updated 9/20/2013 2:41:30 PM
-Updated 9/20/2013 2:41:20 PM
-Updated 9/20/2013 2:41:00 PM
-Updated 9/20/2013 2:40:51 PM