கோபி அருகே பரிதாபம் வேன் மீது லாரி மோதி 3 பேர் பலி
கோபி:கோபி அருகே வேன் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கோபி அருகே திங்களூர் அப்பிச்சிமார் மடம் பகுதியில் பனியன் கம்பெனி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று இரவு 9 மணிக்கு கொளப்பலூர், அயலூர், மல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணி முடிந்து வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆயிபாளையம் பிரிவு அருகே சென்ற போது சிறுவலூரில் இருந்து பெருந்துறை சென்ற லாரி, வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் வேன் டிரைவர் சிறுவலூர் குள்ளநாயக்கனூரை சேர்ந்த கிருஷ்ணன் (45), கோபி அருகே உள்ள பள்ளத்து தோட்டத்தை சேர்ந்த துரையன் மகள் சரஸ்வதி (20), செல்லி பாளையத்தை சேர்ந்த பத்மநாபன் மனைவி சரவணாள் (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் வேனின் இடுபாடுகளில் சிக்கி 17 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து வேன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஈரோடு மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/3/2025 3:51:19 PM
-Updated 9/3/2025 3:51:08 PM
-Updated 9/3/2025 3:50:57 PM
-Updated 9/3/2025 3:50:42 PM
-Updated 9/3/2025 3:40:11 PM
-Updated 9/3/2025 3:31:30 PM
-Updated 9/3/2025 3:07:29 PM
-Updated 9/3/2025 3:07:16 PM
-Updated 9/3/2025 3:06:57 PM
-Updated 9/2/2025 2:33:56 PM
-Updated 9/2/2025 2:33:44 PM
-Updated 9/2/2025 2:33:35 PM
-Updated 9/2/2025 2:30:19 PM
-Updated 9/2/2025 2:30:08 PM
-Updated 8/31/2013 12:23:42 PM