செங்குன்றம் & திருவள்ளூர் சாலையில் குடிநீர் கேட்டு மக்கள் திடீர் மறியல்
புழல்:செங்குன்றம் & திருவள்ளூர் நெடுஞ்சாலையில் குடிதண்ணீர் கேட்டு இன்று காலை மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை அருகே செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சியில் அடங்கிய அம்பேத்கர் நகர், பெருமாள்அடி பாதம் பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக சரியாக குடிநீர் கிடைக்கவில்லை. பொதுக்குழாயிலும் தண்ணீர் வரவில்லை. இதுபற்றி ஊராட்சியில் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், இன்று காலை 50 பெண்கள் உள்பட 200 பேர் திரண்டனர். செங்குன்றம்&திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டதால் ஊராட்சி தலைவர் விநாயகம், சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும். பொதுக்குழாயில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாயத்து தலைவர் கூறினார். இதைத் தொடர்ந்து மறியல் கைவிட்டனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/3/2025 3:51:19 PM
-Updated 9/3/2025 3:51:08 PM
-Updated 9/3/2025 3:50:57 PM
-Updated 9/3/2025 3:50:42 PM
-Updated 9/3/2025 3:40:11 PM
-Updated 9/3/2025 3:31:30 PM
-Updated 9/3/2025 3:07:29 PM
-Updated 9/3/2025 3:07:16 PM
-Updated 9/3/2025 3:06:57 PM
-Updated 9/2/2025 2:33:56 PM
-Updated 9/2/2025 2:33:44 PM
-Updated 9/2/2025 2:33:35 PM
-Updated 9/2/2025 2:30:19 PM
-Updated 9/2/2025 2:30:08 PM
-Updated 8/31/2013 12:23:52 PM