புதுப்பெண் மாயம் கள்ளக்காதலன் என நினைத்து வாலிபருக்கு சரமாரி அடி உதை சோளிங்கரில் பரபரப்பு
சோளிங்கர்:புதுப்பெண் மாயமானதால் அவருடன் வந்தவர் கள்ளக்காதலன் என நினைத்து உறவினர்கள் சரமாரி அடித்து உதைத்தனர். திருவள்ளூர் மாவட் டம் திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பட்டி(30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான பிரமிளா(20) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரமிளாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மாயமான புதுப்பெண்ணை தேடிவந்தனர். இந்நிலையில் மனம் மாறிய பிரமிளா தனது வீட்டிற்கு செல்ல வேலூரிலிருந்து திருத்தணி செல்லும் பஸ்சில் நேற்று பயணம் செய்துள்ளார். அவருடன் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடன் சென்றார். இதனை பிரமிளாவின் உறவினரும், பஸ் டிரைவருமான ஒருவர் பார்த்து உறவினர்களுக்கு போன் செய்து ‘கள்ளக்காதலனுடன் பிரமிளா பயணம் செய்வதாக’ தெரிவித்தார்.
சோளிங்கருக்கு பஸ் வந்தபோது திடீரென 10க்கும் மேற்பட்ட கும்பல் திபுதிபுவென பஸ்சில் ஏறி பிரமிளாவுடன் இருந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிரமிளாவையும், வாலிபரையும் இழுத்து சென்று சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், பிரமிளாவுடன் வந்தவர் சோளிங்கர் அடுத்த மரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பெயிண் டர் சாமுவேல்(35) என தெரியவந்தது. இவருக்கும், பிரமிளாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. கள்ளக்காதலன் என தவறாக நினைத்து வாலிபரை பிரமிளாவின் உறவினர்கள் தாக்கியது தெரியவந்தது.இந்த சம்பவம் சோளிங்கரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 2:35:59 PM
-Updated 10/1/2025 2:35:50 PM
-Updated 10/1/2025 2:35:40 PM
-Updated 10/1/2025 2:34:34 PM
-Updated 10/1/2025 2:34:23 PM
-Updated 10/1/2025 2:20:54 PM
-Updated 10/1/2025 2:20:43 PM
-Updated 10/1/2025 2:20:34 PM
-Updated 10/1/2025 2:20:26 PM
-Updated 10/1/2025 2:20:15 PM
-Updated 10/1/2025 2:20:04 PM
-Updated 10/1/2025 2:11:02 PM
-Updated 9/30/2013 2:14:58 PM
-Updated 9/30/2013 2:14:41 PM
-Updated 9/30/2013 2:14:31 PM