கட்டுமான நலவாரியம் உரிமம் புதுப்பிப்பு தொழிலாளர் திட்ட அலுவலர் அறிக்கை
திருவள்ளூர்:தமிழ்நாடு கட்டுமான நலவாரியம் திருவள்ளூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் சாலிகா பேகம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலத்திட்டத்தின்படி 2 ஆண்டுக்கு ஒரு முறை கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் பதிவை புதுப்பிக்க வேண்டும். அப்படி பதிவு செய்யாதவர்கள், அரசின் விளக்க நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால், அடிப்படை வாரிய பதிவு ரத்து செய்யப்படுவதுடன் அடையாள அட்டையும் ரத்து செய்யப்படும். எனவே, புதுப்பிக்க தவறிய கட்டுமான தொழிலாளர்கள் கண்டிப்பாக பதிவை புதுப்பித்துகொள்ள வேண்டும்.
திருவள்ளூர் பெரியகுப்பம் சித்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 2:35:59 PM
-Updated 10/1/2025 2:35:50 PM
-Updated 10/1/2025 2:35:40 PM
-Updated 10/1/2025 2:34:34 PM
-Updated 10/1/2025 2:34:23 PM
-Updated 10/1/2025 2:20:54 PM
-Updated 10/1/2025 2:20:43 PM
-Updated 10/1/2025 2:20:34 PM
-Updated 10/1/2025 2:20:26 PM
-Updated 10/1/2025 2:20:15 PM
-Updated 10/1/2025 2:20:04 PM
-Updated 10/1/2025 2:11:02 PM
-Updated 9/30/2013 2:14:58 PM
-Updated 9/30/2013 2:14:41 PM
-Updated 9/30/2013 2:14:31 PM