Tamil Month Rasi Palan Maasi 2013
2013
16
Aug
நீர்மூழ்கி கப்பல் விபத்தில் பலியான 5 வீரர்கள் உடல் மீட்பு மேலும் 13 உடல்களை தேடும் பணி தீவிரம்


மும்பை:மும்பை கடற்படை தளத்தில் நேற்று முன் தினம் வெடித்து சிதறிய இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் சிக்கி பலியான 5 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள் ளன. மேலும் 13 பேரின் உடல்களை தேடும் பணி நடக்கிறது.

மும்பையில் கொலாபா கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கி கப்பல் நேற்று முன் தினம் அதிகாலை வெடித்து சிதறியது. இந்த விபத்தின் போது கப்பலில் கடற்படையின் 3 அதிகாரிகள் மற்றும் 15 வீரர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும நீர்மூழ்கி விபத்தில் சிக்கினர். அவர்கள் உயிர் பிழைத்திருப்பததற்கான வாய்ப்புகள் இல்லை என கருதப்படுகிறது.

 இந்த வெடிவிபத்தில் நீர்மூழ்கி கப்பல் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. நீர்மூழ்கி கப்பலுக்குள் கடல் சேறு மற்றும் தண்ணீர் புகுந்துள்ளது.  இதனால் 3 மீட்டர் ஆழத்துக்கு கப்பல் மூழ்கி விட்டது. மூன்றில் ஒரு பகுதி மட்டுமே வெளியே தெரிகிறது. உள்ளே சிக்கியுள்ள வீரர்களின் சடலங்களை மீட்க கடந்த 2 நாட்களாக தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெடிவிபத்தின் போது ஏற்பட்ட கடும் வெப்பத்தின் காரணமாக இரும்பு கதவுகள் உருக்குலைந்து திறக்க முடியாத அளவுக்கு இறுக்கமடைந்து விட்டன. இதனால் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களால் கப்பலுக்குள் புக முடியாத நிலை இருந்துள்ளது. மேலும், நீருக்குள் மூழ்கி இரும்பு கதவுகளை வெல்டிங் கருவி மூலம் வெட்டி எடுக்கும் தொழில் நுட்பம் கடற்படை வீரர்களுக்கு இல்லை எனவும் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான கப்பலில் பல ஆயுதங்கள் உள்ளன. இவை எந்த நேரமும் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே 18 வீரர்களை பலி கொடுத்துள்ள நிலையில் மேலும் பல வீரர்களின் உயிரை பயணம் வைக்க அதிகாரிகள் தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ராட்சத பம்ப்புகள் வாயிலாக நீர்மூழ்கி கப்பலில் புகுந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்மூழ்கிகப்பல் ஓரளவு மேலே வந்தவுடன் உடல்களை தேடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய 18 வீரர்களின் பெயர்களை இந்திய கடற்படை நேற்று வெளியிட்டுள்ளது.இதற்கிடையில் இன்று காலை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran