Tamil Month Rasi Palan Maasi 2013
2013
14
Aug
பழவேற்காட்டிற்கு ஆட்டோவில் கடத்திய 196 மதுபாட்டில் பறிமுதல் டிரைவர் உள்பட 3 பேர் சிக்கினர்


புழல்:பழவேற்காட்டிற்கு ஆட்டோவில் கடத்தி சென்ற 196 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரிக்கிறார்கள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். சென்னை செங்குன்றத்தில் இருந்து பாடியநல்லூர் வழியாக பொன்னேரி பழவேற்காடு பகுதிக்கு மது பாட்டில்களை சிலர் கடத்தி செல்வதாக மாதவரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் இன்று காலை பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது அதில் 196 மது பாட்டில்கள் இருந்தது. பழவேற்காட்டிற்கு கடத்தி சென்ற செங்குன்றம் பாலவாயல் அண்ணா சாலை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் (24), காப்பிரியன் (24), அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தை சேர்ந்த எபி (33) ஆகியோரை கைது செய்தனர். மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran