மயிலாடுதுறை:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் 2008ல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சச்சிதானந்தம். அப்போது, ஒரு கொள்ளை முயற்சி வழக்கை பதிவு செய்து, மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணை கடந்த ஜுன் 13ம் தேதி வந்தபோது சாட்சி சொல்ல இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் ஆஜராகவில்லை. அதை தொடர்ந்து ஜூன் 14, 25ம் தேதிகளிலும், ஜூலை 5, 17 ஆகிய தேதிகளிலும் வழக்கில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தத்துக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ஆகஸ்ட் 5ம்தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். 5ம் தேதியும் ஆஜராகாததால் ஆகஸ்ட் 13ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நேற்றும் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் ஆஜராகவில்லை. எனவே வரும் 21ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லை என்றால் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி லதா நேற்று உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் தற்போது வேளாங்கண்ணியில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM