ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு முக்கிய புள்ளிகள் 3 பேர் சிக்கினர் சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணை
சேலம்:சேலத்தில் பாஜ மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19ம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வேலூர் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் வெள்ளையப்பன் கொலையுடன் ஒப்பிட்டு விசாரணை நடந்து வருகிறது. வெள்ளையப்பன் கொலையில் தொடர்புடைய, தேடப்படும் குற்றவாளிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 பேர் சேலம் வந்து ஆடிட்டர் ரமேஷை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையில் சேலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய ஷாஜகானை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. கொலை தொடர்பாக பழைய கைதிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சேலத்தை சேர்ந்த 3 முக்கிய புள்ளிகள் சிபிசிஐடி போலீஸ் வலையில் சிக்கியுள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாஜகானுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலத்தை சேர்ந்த முக்கிய புள்ளிகள் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைதான ரவுடிகள் கோபி, ரகுவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்‘‘ என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM
-Updated 9/14/2013 12:24:35 PM
-Updated 9/14/2013 12:24:16 PM