Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Aug
கோர்ட் உத்தரவுப்படி தனியார் இடத்தில் இருந்த விஏஓ ஆபீஸ் மாற்றம்


மன்னார்குடி:மன்னார்குடியில் தனியார் இடத்தில் இயங்கி வந்த விஏஓ அலுவலகம் கோர்ட் உத்தரவுப்படி காலி செய்யப்பட்டது. அலுவலகத்துக்கு மாற்று இடம் தேடும் பணி நடக்கிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பைங்கா நாட்டை சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மனைவி சுலோசனா. ஞானசேகரன் என்பவரின் மனைவி பானுமதி. இருவரும் மன்னார்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மன்னார்குடியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் விஏஓ அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஏஓ அலுவலகத்தை காலி செய்து கொடுக்கும்படி வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால், கட்டிடத்தை காலி செய்யவில்லை. அதை தொடர்ந்து கோர்ட் மூலம் காலி செய்து தரும்படி கோரி கடந்த ஆண்டு ஆகஸ்டில் சுலோசனாவும், பானுமதியும் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், விஏஓ அலுவலகத்தை கோர்ட் ஊழியர்கள் காலி செய்து இடத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி, கோர்ட் ஊழியர்கள் நேற்று விஏஓ அலுவலகம் வந்தனர். பணியில் இருந்த விஏஓவிடம் தகவல் தெரிவித்து அலுவலகத்தில் இருந்த மேசை, நாற்காலிகள் மற்றும் ஆவணங்களை எடுத்து வெளியே வைத்தனர். அந்த இடத்தை சுலோசனா, பானுமதி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பொருட்களை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு கோர்ட் ஊழியர்கள் சென்றனர். விஏஓ அலுவலகம் தற்காலிகமாக மன்னார்குடி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வருகிறது. மாற்று இடம் தேடும் பணியில் வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran