டீசல் விலை உயர்வால் திருவள்ளூர் மாவட்டத்தில் மினிபஸ் இயக்கம் குறைப்பு
திருவள்ளூர்:பராமரிப்பு செலவு, கட்டண குறைவு, மோசமான சாலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிராமங்களில் தனியார்களால் இயக்கப்பட்டு வந்த மினி பஸ் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்தூர் திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே பேட்டை, பூண்டி, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி உள்பட 14 ஒன்றியத்தில் 526 கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகவும், கூலி தொழிலாளிகளாகவும் உள்ளனர். இந்த கிராமங்களுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் வேலைக்கு எளிதாக செல்ல முடிந்தது. மினி பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ. 3 முதல் அதிக பட்ச கட்டணம் ரூ. 6 முதல் வசூலிக்கப்படுகிறது. தற்போது டீசல் விலை உயர்வால் மினி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டும் குழியுமான சாலையில் செல்வதால் பஸ் பராமரிப்பு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் சிலர் மினி பஸ் பெர்மிட்களை ரத்து செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 86 மினி பஸ்கள் ஓடின. தற்போது 46 மினி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஷேர் ஆட்டோ, மேஜிக் வாகனங்களின் ஆட்களை ஏற்றி செல்வதால் மினிபஸ்களின் வருமானம் குறைந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பஸ் குறைக்கப்பட்டு வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM
-Updated 9/14/2013 12:24:35 PM
-Updated 9/14/2013 12:24:16 PM