ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலால் இந்திய கடற்படைக்கு பெருமை ஜி.கே.வாசன் பேச்சு
சென்னை: இந்திய கடற்படைக்கு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகும் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பல், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து நேற்று கடலில் இறக்கப் பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சரின் மனைவி எலிசபெத் தொடங்கிவைத்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி சிறப்புரை ஆற்றினார்.
இதில், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பல் என்பது இந்திய கப்பல் படையின் பெருமைக்கும், பெருமிதத்திற்கும் உரிய போர்க் கப்பல் செயல் திட்டங்களுள் ஒன்றாகும். அளவு, பரிமாணம் மற்றும் அமைப்பைப் பொறுத்தவரை, இதுவரை உருவாக்கப்பட்ட உள்நாட்டு போர்க்கப்பல் எதனையும் இதற்கு ஈடு சொல்ல முடியாது.
இதுபோன்ற கனபரிமாணம் உள்ள விமானந்தாங்கியை கட்டுமானம் செய்ய முனைந்தவர்களில் உலக அளவில் நாம் ஆறாவதாக இருக்கிறோம். உள்நாட்டில் உருவாக்குதல் என்பது நமக்கு தற்சார்ப்பு தன்மையை தருவதோடு மட்டுமல்லாமல், நம்முடைய நீர்ப்பகுதியையும் நீர் வழி எல்லைகளையும் காப்பதற்கு உறுதுணை புரிகிறது. அதுமட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்திற்கும் பெரிய அளவில் பங்களிப்பை அளிக்கிறது. விரைவான உலக மயமாக்கலின் விளைவாக கடல் பகுதியில் கடற்கொள்ளை, அச்சுறுத்தல் உள்ளிட்டவை நிலவி வரும் நேரத்தில், கப்பல்களின் ஆதரவு, உறுதுணையும் அவசியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM
-Updated 9/14/2013 12:24:35 PM
-Updated 9/14/2013 12:24:16 PM