சாப்பாடு பிரச்னையில் தடியடி திருச்சி சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் மரத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி
திருச்சி:திருச்சி மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,300க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 15க்கும் மேற்பட்ட பிளாக்குகள் உள்ளன. கைதிகளுக்கு காலை 7.30 மணி, மதியம் 12.30 மணி மற்றும் இரவு சாப்பாடு மாலை 5.30 மணியளவில் வழங்கப்படும். இன்று காலை வழங்கப்பட்ட சாப்பாடு சரியில்லை என கூறி கைதிகள் கோஷமிட்டனர். அங்கு சென்ற துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, சிறை காவலர்கள் கைதிகள் மீது தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. சிறை காவலர்களை கண்டித்து 1வது 6வது மற்றும் 7வது பிளாக்குகளில் உள்ள விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அரியலூரை சேர்ந்தவர் சிகாமணி (27). குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை சிறை வளாகத்தில் இருந்த மரத்தில் சிகாமணி திடீரென தூக்கு மாட்டிக் கொண்டார். அதை பார்த்த சிறை காவலர்கள் ஓடிச் சென்று சிகாமணியை கீழே இறக்கும் போது மரக்கிளையுடன் கீழே விழுந்தார். இதில் சிகாமணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தியதில், கைதி சிகாமணிக்கும் சிறை அதிகாரி ஒருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாகவும், இதில் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM