திருக்கழுக்குன்றம்:வள்ளிபுரம் பாலாற்றில் திருட்டு மணல் எடுத்த 5 மாட்டு வண்டிகளை இன்று போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஓட்டி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருக்கழுக்குன்றம் அடுத்த வள்ளிபுரம் பாலாற்றில் மாட்டு வண்டிகளில் திருட்டு மணல் எடுத்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி, போலீசார் இன்று காலை சோதனைக்கு சென்றனர். அப்போது முடையூர் கூட்டுரோடு பகுதியில் மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை நிறுத்தி பறிமுதல் செய்தனர். அவற்றை ஓட்டி வந்த திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ரமேஷ் (23), கண்ணன் (40), குமார் (42), தனசேகர் (21), டி.குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகள் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM