நாடாளுமன்ற தேர்தலை மதிமுக புறக்கணிக்காது வைகோ பேச்சு
திருச்சி:திருச்சியில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நேற்று இரவு நடந்தது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் ரூ.83 லட்சம் தேர்தல் நிதியை பெற்றுக்கொண்ட பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலை மதிமுக புறக்கணிக்காது. கண்டிப்பாக போட்டியிடுவோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம். பாராளுமன்றத்தில் மதிமுக குரல் ஒலிக்கும்‘ என்றார்.
முன்னதாக பெரம்பலூரில் நடந்த விழாவில் வைகோ பேசுகையில்,அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி விருதுநகரில் மதிமுக தேர்தல் மாநாடு நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம், முல்லை பெரியாறு ஆகிய பிரச்னைகளில் மதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதற்கு தீர்வு கிடைக்கும் வரை மதிமுகவின் போராட்டம் தொடரும் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM