நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை:நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவிலுள்ள கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு நிலவும் இயற்கை எழிலை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை கொண்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் இயற்கையை மட்டும் ரசிக்காமல் பழங்குடி இன மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பண்பாட்டை பாதுகாக்கவும் ஒரு அரசு சார்ந்த அமைப்பு அவசியம். இதற்காக பழங்குடியினர் பண்பாட்டு பண்பாட்டு ஆதார மையம் ஒன்றை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மழைவாழ் மக்களின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரு கூரையின் கீழ் நடத்த உதவும். இதற்காக ஒரு நவீன கலையரங்கம், பொருட்காட்சிக் கூடம், அருங்காட்சியகம் மற்றும் நிலையான விற்பனை அரங்குகள் என அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் கட்டப்படும். ஒரே சமயத்தில் 984 பேர் அமரக்கூடிய தரைத்தளமும், முதல் மற்றும் 2வது தளம் 51,881 சதுர அடி பரப்பளவிலும் இருக்கும். இம்மையம் உதகமண்டலம் தாவரவியல் பூங்காவிற்கு அருகில் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடியே 12லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM