கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் வாந்தி& பேதிக்கு பெண் பலி
திருத்தணி:கழிவுநீர் கலந்துவந்த குடிநீரை குடித்த பெண் உயிரிழந்தார். இது திருத்தணி பகுதி மக்களிடத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு 2&வது தெருவை சேர்ந்தவர்கள் அம்சா (50). மீனாட்சி (48), யாமினி (8), நதியா (2). இவர்கள் சில நாட்களுக்கு முன் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததால்தான் வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி ஏற்பட்டதாக காந்தி ரோடு பகுதியை சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்சா, சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். வாந்தி, பேதிக்கு பெண் பலியாகி இருப்பதால் திருத்தணி மக்கள் பீதியில் உள்ளனர்.
இது குறித்து கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறும்போது, ‘‘ அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் வரும் வழியில் 15 இடத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 5ம் தேதி முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. குடிநீரில் கழிவுநீர் கலந்தது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். காய்ச்சிய குடிநீரை பொதுமக்கள் குடிக்க வேண்டும்‘ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM