ஆந்திராவிற்கு ரயிலில் கடத்துவதற்காக முட்புதரில் பதுக்கி வைத்திருந்த27 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி:ஆந்திராவிற்கு ரயிலில் கடத்தி செல்வதற்காக முட்புதரில் பதுக்கி வைத்த 27 மூட்டை ரேஷன் அரிசியை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதியில் ரயில் மூலம் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்தி செல்வதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவிற்கு புகார் வந்தது.
கலெக்டரின் உத்தரவின்பேரில் பொன்னேரி வட்டவழங்கல் அலுவலர் வின்சன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் இன்று காலை மீஞ்சூர், பொன்னேரி, அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தினர். அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் 27 மூட்டைகள் ரேஷன் அரிசி ஆந்திரவிற்கு ரயிலில் கொண்டு செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனர். அரிசி மூட்டையை பதுக்கியது யார் என்று மீஞ்சூர் போலீசார் விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM