திருவள்ளூரில் போதையில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது
திருவள்ளூர்: போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூரில் நேற்றிரவு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் அம்சா நகரை சேர்ந்தவர் பாலாஜி (29). தொழிலாளி. நேற்று இரவு மது குடிப்பதற்காக கிராமத்தில் உள்ள ஏரிக் கரைக்கு பாலாஜி சென்றார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா (45) தனது நண்பர்கள் 4 பேருடன் அங்கு மது குடித்து கொண்டிருந்தார். நாங்கள் வழக்கமாக மது குடிக்கும் இடத்திற்கு நீ எதற்கு வந்தாய் என்று பாலாஜிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சிவா கத்தியால் பாலாஜி கையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM