கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை உடலில் தீப்பிடித்து எரியும் குழந்தையின் வியர்வையை சோதனைக்கு அனுப்பினர்
கீழ்பாக்கம்:உடலில் தீப்பிடித்து எரியும் குழந்தையின் வியர்வையை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்த தம்பதி கர்ணன் (27), ராஜேஸ்வரி(24). கடந்த மே மாதம் ராகுல் என்ற மகன் பிறந்தான். திடீரென குழந்தையின் 2 கால்களும் தீப்பிடித்து எரிவது பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதன்பிறகு 3 நாள் கழித்து மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. செய்வதறியாது பெற்றோர் தவித்தனர். இந்த நிலையில் குழந்தையின் நெஞ்சு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு கடந்த 3 நாளுக்கு வீடு திரும்பினார். இதன்பிறகு குழந்தையின் தலையில் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை ராகுலை சேர்த்தனர். குழந்தைகள் நல தலைமை டாக்டர் நாராயணபாபு தலைமையில் டாக்டர் குழுவினர் குழந்தையின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.குழந்தையின் நாடி துடிப்பு, இதய துடிப்பு பற்றி அறிய ‘‘மல்டிபேரா மானிடர்‘‘ கருவி பொருத்தி உள்ளனர். உடலில் தீப்பிடித்தால் உடனடியாக அணைக்க தண்ணீர் வைத்துள்ளனர்.
இதுபற்றி டாக்டர் நாராயணபாபு கூறுகையில், ‘‘ இந்தியாவில் முதன் முறையாக இந்த குழந்தைக்கு தீப்பிடித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை ராகுல் உடலில் இருந்து வெளியேறும் வாயு, வியர்வை காரணமாக தீப்பிடித்து உள்ளதா என்று கண்டுபிடிக்க வியர்வை, சிறுநீர், ரத்தம் ஆகியவற்றை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்‘ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM